Singin

2013/08/01

தழும்பில்லா வாசெக்டெமி

புதிய முறையில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல சிகிச்சை

தழும்பில்லா வாசெக்டெமி

1.பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல சிகிச்சைகளைக் காட்டிலும் மிகச் சிறந்தது

2.எளிமையானது

3.பாதுகாப்பானது

4.தையல் இல்லாதது

 5.தழும்பில்லாதது

  6.மருத்துவ மனையில் தங்க வேண்டியதில்லை

  7. அரசு வழங்கும் ஊக்கத் தொகையும் உண்டு .

என்பதையெல்லாம்  தகுதி வாய்ந்த தம்பதியர்களிடம் விளக்கி தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஆனாலும் சமூக மற்றும் உளவியல் காரணங்களால் ஆண் அறுவைச் சிகிச்சை செய்ய முன்வர ஆண்கள் தயங்குகிறார்கள்.

 அதைகாட்டிலும் ஒரு சில ஆண்கள் முன் வந்தாலும் அவர்கள் மனைவிமார்கள் அவர்களை தடுத்து தாங்களே செய்து கொள்கிறார்கள். காரணம் சம்பாதிப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே. ஆண்களுக்கு ஏதாவது முடியாமல் போய் விட்டால் அந்த குடும்பத்திற்கு சிரமமாகிவிடும். இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இது போல பல சமூக உளவியல் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் குடும்ப நல சிகிச்சையில் ஆண்களின் பங்களிப்பும் அவசியம். பெண்களைப் போல் மனமுவந்து  ஆண்களும் வாசக்டமி செய்து கொள்ளும் காலம் வரும்.அது வரை  நாமும் இதில் உள்ள நன்மைகளை விளக்கமாக எடுத்து சொல்லி உழைப்போம். வெற்றி பெறுவோம்.

இது குறித்து நாம் தம்பதியர்களிடம்  தனித்தனியாகவும், பொதுவாகவும் பல முறை ஆலோசனைகள் வழங்கியுள்ளோம்.











0 comments:

Post a Comment