Singin

2014/01/30

அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ...


அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதோடு ஒரு காலத்தில் முள்காடாக காட்சியளித்த இந்த ஆரம்ப சுகாதார நிலையம் இன்று 100 க்கு மேற்பட்ட நிழல் தரும் மரங்களுடனும்,எண்ணற பூச்செடிகளுடனும் காட்சியளிக்கிறது. இம்மரங்களும் செடிகளும் மேலும் நன்கு பராமரிக்கப்படவேண்டும் என்ற நோக்கில்  அமரபூண்டியைச் சேர்ந்த திரு கந்தசாமி அவர்கள்  மரங்களுக்கும் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவதற்கு 200 அடி  பைப்பை (2 ரோல்)  அமரபூண்டி ஊராட்சி தலைவர்,துணைத்தலைவர்,ஊராட்சிச் செயலாளர் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் அமரபூண்டி மருத்துவ அலுவலரிடம் ஒப்படைத்தார்.





கழிவுகளை போடுவதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு குழியை (சேப்டி பிட்) அமரபூண்டி ஊராட்சி தலைவர்,துணைத்தலைவர்,ஊராட்சிச் செயலாளர் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பார்வையிட்டு பாராட்டினார்கள் 




பாதுகாப்புக்குழி அமைத்துக் கொண்டிருக்கும் போது   மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பார்வையிடுகின்றனர்






போலியோ சொட்டுமருந்து முகாமின் போது மருத்தவ அலுவலர்  ஆலோசனை வழங்குகிறார்






காய்ச்ச்ல் கண்ட நோயாளியை அவர் வீட்டில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்குகிறார் மருத்துவ அலுவலர் உடன் சுகாதார ஆய்வாளர்


0 comments:

Post a Comment